Tamilnadu
“லாரி மோதி 12ம் வகுப்பு மாணவி பரிதாப பலி” : தந்தை கண்முன்னே நடந்த சோகம் !
மேட்டூர் அடுத்த தேசாய் நகரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகராஜன் (50). இவரது மகள் அதிஷா (16) சாம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலையில் தேர்வு எழுத சென்ற மாணவி அதிஷாயாவை அவரது தந்தை நாகராஜன் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கருமலைக்கூடல் அருகே வந்தபோது வேகமாக வந்த லாரி, நாகராஜனின் இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் லாரியின் டயர் ஏறி இறங்கியதில் மாணவி அதிஷா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் இறந்த மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த நாகராஜன் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கருமலை கூடல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை கண்முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் மேட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!