Tamilnadu
சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார்: உயிர் தப்பிய குடும்பம்: இரவில் நடந்த பயங்கரம்!
சென்னையை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திவ்யா.
இந்நிலையில் தம்பதிகள் மற்றும் குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் நேற்று இரவு தேனாம்பேட்டையில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர். காரை திவ்யா ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கிண்டி நோக்கிச் செல்லும் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த திவ்யா உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பிறகு அனைவரும் காரில் இருந்து வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடம் தாமதித்திருந்தாலும் அனைவரும் தீயில் சிக்கியிருப்பார்கள்.
இது பற்றி தகவல் அறிந்தது அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்திருந்த தீயை அனைத்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து விட்டது. இது குறித்து பரங்கிமலை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கத்திப்பாரா பகுதியில் கிண்டி நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!