Tamilnadu
அரசுப் பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் கவனத்திற்கு.. TNPSC வெளியிட்டுள்ள முக்கிய தகவல் என்ன தெரியுமா?
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துறைகளுக்கு ஏற்பவும், கல்வித் தகுதிக்கு ஏற்பவும் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு பகுதியாக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுக்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் காலிப்பணியிடங்கள் எவ்வளவு என்ற முழு விவரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்தது. இதற்கான முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதியில் இருந்து டிசம்பர் 23ம் தேதி வரை 11 தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கும், ஊரக மேம்பாடு, சாலை ஆய்வாளர் பணியில் காலியாக உள்ள 762 பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மே மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குரூப் 4 பணிகளுக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் முடிவுகள் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!