Tamilnadu
புதிய களத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. ஒதுக்கப்பட்ட துறை என்ன தெரியுமா?
தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதோடு கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹைலைட்டே 'ஒற்றை செங்கல்' புரட்சிதான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அவரின் 'ஒற்றை செங்கல்' புரட்சிதான் பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்றை பெற்றது.
பின்னர் தி.மு.க சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் பெற்றி பெற்றார். இதையடுத்து தனது தொகுதியில் மக்கள் தேவைகளை பார்த்துப் பார்த்து நிறைவேற்றி வருகிறார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனது தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித் தொகை , 800 புதிய மின் இணைப்பு, இலவச வைஃபை, மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா நடைபாதை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ரகசியகாப்பும், பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிறகு அமைச்சராகப் பதவியேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றுவேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!