Tamilnadu

“போன் செய்தால் ‘ரெஸ்பான்ஸ்’ செய்யுறாங்க.. கரண்ட் இதுவரைக்கும் கட் ஆகல” - முதல்வரை பாராட்டிய பொதுமக்கள் !

மாண்டஸ் புயலால் மரம் விழுந்ததை உடனடியாக வந்து அகற்றியது. இப்பெருமழையில், தண்ணீர் தேங்காத நிலை குறித்து சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பாராட்டினையும் தங்களது மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்த பொதுமக்களின் பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பேட்டி வருமாறு:-

நடுத்தர வயது பெண் : மாந்தோப்பு காலனி, இரவு எந்த நேரத்தில் இந்த மரம் விழுந்தது என்று தெரிய வில்லை. ஆனால் காலை 7 மணிக்கு எழுந்து பார்க்கும் போது கார்ப்பரேஷன், போலீஸ் எல்லோருமே வந்து அதனை கிளியர் செய்துக்கிட்டு இருக்காங்க. இப்போது வரைக்கும் வேலை செய்துக்கிட்டு இருக்காங்க, போன் செய்தால் “ரெஸ்பான்ஸ்" செய்யுறாங்க.

நடுத்தர வயது ஆண்: கே.கே.நகர் பன்னீர்செல்வம் சாலையில் இரவு மரம் விழுந்து விட்டது. காலையில் போன் செய்தேன், உடனடியாக மாநக ராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணி வந்துயில் ஈடுபட்டு இருக்கிறாங்க.

கரண்ட் இதுவரைக்கும் கட் ஆகவில்லை. இவ்வளவு பெரிய புயலுக்கு கரண்ட் கட் ஆகாதது ஆச்சரியம்தான். போன் செய்தால் உடனடியாக ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. முன்பெல்லாம் தண்ணீர் தேங்கும். இப்போது சாலையில் தண்ணீரே தேங்காமல் ரோடே கிளியராக இருக்கு.

முதியவர்: பாரதிதாசன் காலனி, இது லோ லெவல் ஏரியா. தங்களுடைய சட்டமன்ற உறுப்பினரும், மாமன்ற உறுப்பினரும் எல்லா உதவிகளையும் செய்து, எங்களுக்கு, நாங்கள் கேட்கின்ற நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்து, எங்களுடைய பணிகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

இந்த இடத்தில் பார்த்தீர்கள்! என்றால் முன்பெல்லாம் மூன்றரை அடி தண்ணீர் தேங்கி இருந்தது. இரண்டு பக்கமும் இரண்டு மோட்டார் பம்புகளைவைத்து தண்ணீரை வெளியேற்றி விட்டார்கள். இப்போது தண்ணீர் முழுமையாக வடிந்து விட்டது. இது ஒருமகிழ்ச்சிகரமான செய்தி என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடுத்தர வயது ஆண் 2 : இரவில் இங்கே மரம் விழுந்தது. நாங்கள் புகார் செய்வதற்கு முன்பே கார்ப்பரேஷன் வந்து மரத்தை கிளியர் செய்துட்டாங்க. கடந்த காலத்தை போல் இப்போது தண்ணீர் எங்கேயுமே "பிளாக்" ஆகவில்லை. பொது மக்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறி, பாதுகாப்பாக இருக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டதால் இந்த புயலுக்கு பாதிப்பு ரொம்ப குறைந்துதான் இருக்கு” இவ்வாறு பொதுமக்கள் தங்களின் பேட்டியில் கூறியுள்ளனர்.

Also Read: “2024ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!