Tamilnadu
"மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
ஆனால், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை சுற்றுசுவரோடு நிற்கிறது. அதோடு சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ்ஸில் 95% பணிகள் முடிவடைந்தது என்று கூறியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஆர்டிஐயில் (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள், "மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைகா நிறுவனம் வழங்கும். 20 சதவீத தொகையான ரூ.350.1 கோடியை ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை" எனக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மீண்டும் ஆர்டிஐயில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜிக்கா நிறுவனம் இதுவரை ஒரு ரூபாயைக் கூட விடுவிக்கவில்லை என்று ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த பதில் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!