Tamilnadu

தேசிய அளவிலான விளையாட்டில் 5 பதக்கம் வென்று அசத்தல்.. தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த பெண் போலிஸ்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 'காவல் கரங்கள்' மையத்தில் பணியாற்றி வருபவர் லீலா ஸ்ரீ. இவர் பெரியமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார்.

மேலும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை பெற்றுள்ளார். குறிப்பாக காவல்துறையில் வைக்கப்படும் விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் என அனைத்திலும் பங்கு பெற்று வென்று சான்றிதழ்களை குவித்து வருகின்றார்.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தேசிய அளவில் மூத்தோல் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மட்டுமல்லாது, இலங்கை ,பங்களாதேஷ் ஆகி நாடுகளில் இருந்து 700க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் காவல்துறை சார்பாக தமிழ்நாட்டில் இருந்து மூன்று பேர் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் காவலர் லீலா ஸ்ரீ. இவர் இந்த போட்டியில் 5 பதக்கங்கள் வென்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

400 மீட்டர் ரிலே பந்தயத்தில் தக்கப்பதக்கம், 100 மீட்டர் ஹடுல் மற்றும் 100 மீட்டர் ரிலேவில் வெள்ளி, குண்டு எறிதல் மற்றும் ஹம்மர் த்ரோவில் வெண்கலம் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று லீலா ஸ்ரீ அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எங்கும் அறிவியல் யாவும் கணிதம்.. 'வானவில் மன்றம்' என்ற புதிய திட்டம் தொடக்கம்: அசத்தும் தமிழ்நாடு!