Tamilnadu

முதல் முறையாக தமிழக எழுத்தாளருக்கு குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது அறிவிப்பு.. யார் அவர்?

கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர் குப்பளி வெங்கடப்கௌடா புட்டப்பா. ஆனால் இவர் எழும் நூல்களில் குவெம்பு என்றே பெயர் இருக்கும். இதனால் அவரை குவெம்பு என்று சென்னால்தான் இலக்கிய உலகத்தில் பரிட்சையம். இவர் ஞானபீடம், பத்ம பூசன், சாகித்திய அகாதமி என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கன்னட இலக்கியத்தில் மட்டுமல்லாது இந்திய இலக்கியம் வரை இவரது கவிதைகள் பிரபலம்.

கர்நாடக மாநிலம், இரேகொடிகை என்ற ஊரில் 1904ம் ஆண்டு பிறந்த இவர் 1994ம் ஆண்டு தனது 89ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது பெயரில் இலக்கிய உலகத்தில் சமூகத்திற்கான படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு 2013ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்படும் எழுத்தாளருக்கு ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. இவர் 1964ல் விருத்தாசலத்தில் பிறந்தவர். இவரது முதல் நூல், ‘கோவேறு கழுதைகள்’ எனும் நாவலாகும். தொடர்ந்து, ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களை எழுதினார் இமையம்.

எழுத்தாளர் இமையம் எழுதி 2018ம் ஆண்டு க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘செல்லாத பணம்’ நாவலுக்காக கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதை இதுவரை பெற்றவர்கள்:

2013 - சச்சிதானந்தன் - மலையாளம்

2014 - நாமவர சிங் - ஹிந்தி

2015 - ஷியாம் மனோஹர் - மராத்தி

2016 - தேவனூரு மகாதேவா - கன்னடம்

2017 - ஹோமென் போர்கோஹைன் மற்றும் நீலமணி ஃபுகான் - அசாமி

2018 - ஜீலானி பானு மற்றும் ரத்தன் சிங் - உருது

2019 - குருபஜன் சிங் மற்றும் அஜீத் கௌர் - பஞ்சாபி

2020 - ராஜேந்திர் கிஷோர் பாண்டா - ஒடியா

2021 – திருமதி சத்யவதி - தெலுங்கு

Also Read: “அதிமுகவின் உட்கட்சி பூசல்.. எடப்பாடி ஆளுநரை சந்தித்த காரணம் இதுதான்”: கடுமையாக சாடிய அமைச்சர் பொன்முடி!