Tamilnadu

அர்ச்சகர் தாக்கப்பட்ட விவகாரம்.. குடிபோதையில் தகராறு செய்தது அம்பலம்: உண்மையான காரணம் என்ன?

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேஷாத்ரி. இவர் கோயில் அர்ச்சகராகவும், அறங்காவல் குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், கோயிலுக்குச் சொந்தமான குளத்தை மூடிவிட்டு கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.கவுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிடும் சில சேனல்கள் அர்ச்சகரை தி.மு.கவினர் தாக்கியதாகச் செய்தி வெளியிட்டனர்.

இதையடுத்து போலிஸார் இது குறித்து விசாரணை செய்ததில் தி.மு.கவினர் சேஷாத்ரி தாக்கவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. மேலும் உண்மையை மறைத்து பொய்யான தகவலை வெளியே கூறியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள மதுக்கடையில் சேஷாத்ரி மற்றும் அவரது நண்பர் கார்த்தி ஆகியோர் மது குடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இவர்கள் காரில் பிரியாணி சாப்பிடுவதற்காகக் காஞ்சிபுரம் டவுன் பேங்க் பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு வந்துள்ளனர்.

அப்போது மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் இவர்களது கார் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் மதுபோதையிலிருந்த சேஷாத்ரி மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து துப்பரவு பணியிலிருந்த ஒவர் சேஷாத்ரியை அடித்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையிலும், பிரியாணி கடையிலும் இருந்ததால் நடந்த உண்மையை மறைத்து கோயில் நிலத்தை மூடி கார் பார்க்கிங் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மர்ம நபர்கள் தாக்கியதாகப் பொய்யாக சேஷாத்ரி கூறியது தெரியவந்துள்ளது.

Also Read: பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!