Tamilnadu
சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பா?.. துயரத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவரது நண்பர் ராம்குமார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் ஒன்று சேர்த்து மது குடித்துள்ளனர். பிறகு ஹோட்டல் ஒன்றில் மகாவிஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டிற்குச் சென்று மகாவிஷ்ணு தூங்கியுள்ளார்.
பின்னர், நீண்ட நேரம் ஆகியும் மகாவிஷ்ணு எவ்விதமான அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை எழுப்பப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் அப்படியே படுத்த படுக்கையாகவே இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இளைஞரின் உயிரிழப்பிற்கு சிக்கன் ரைஸ்தான் காரணமாக என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். மது குடித்துவிட்டு இரவில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுத் தூக்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!