Tamilnadu
மின்சாரத்துறையில் தமிழ்நாடு சாதித்தது என்ன? .. இலவச மின்சாரம் வழங்கும் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் தமிழக விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட உணவு உற்பத்தி பெருகிட மேலும் 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்காக உழைத்து வருகின்றன. திட்டங்களைத் தீட்டி வருகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசுபொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரைபல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்காக மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறப்பு. பெறப்பட்ட புகார்களுக்கு 99% உடனடிதீர்வு. உயர் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்ப்பதற்காக புதியதாக 8,905 எண்ணம் மின் விநியோகமின்மாற்றிகள் நிறுவப்பட்டன. மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 23,780 புதிய மின் விநியோக மின்மாற்றிகள்நிறுவப்பட்டன. அகில இந்திய அளவில் காற்றாலை மின்உற்பத்தியில் முதல் இடம்.
அகில இந்திய அளவில் காற்றாலை மின்உற்பத்தியில் முதல் இடம். 1,528 மெகாவாட் புதிய சூரிய மின்சக்தி மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு இந்திய அளவில் சூரியஒளி மின்உற்பத்தியில் நான்காவது இடம். 11.09.2022 அன்று, மரபுசாரா எரிசக்தியின்மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில்74% பங்களிப்பு செய்து இந்திய அளவில் சாதனை. என்று பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின்உற்பத்தி நிலையங்களின் திறன் 34,867 மெகாவாட் ஆகும். மின்தேவையின் அதிகரிப்பை கருத்திற் கொண்டுஅனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் , வரும் 2030 ஆம்ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6,000 மெகாவாட் சூரியஒளி மின்நிலையங்களும், 14,500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்திநிலையங்களும்,
2,000 மெகாவாட் மின்கலன்சேமிப்பு நிலையங்களும் 3,000 மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்திநிலையங்களும் ஆக மொத்தம் 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்திநிலையங்கள் தமிழ்நாடு மின் கட்டமைப்புடன்இணைப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துவருகிறது. இதனால், தமிழ்நாட்டின் மின்உற்பத்தி வருகின்ற 2030 ஆம் ஆண்டில் 65,367 மெகாவாட் திறனாக உயரும்.
தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்திமாவட்டங்களாக (Solar District)மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இந்தஅரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுவதுமாக தன்னிறைவுபெறுவதோடு மட்டுமின்றி, அகில இந்தியஅளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகதிகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியைமக்களுக்கு இந்த அவையில் பெருமிதத்தோடுதெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!