Tamilnadu
லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் உதவி இயக்குநர்.. இளைஞர்களுக்கு கோவை காவல் ஆணையர் சொன்ன Good News என்ன?
தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இளைஞர்களுக்கு என்றே முதன்மைப் படுத்தி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களைத் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து அரசு நடத்தி வருகிறது. '234 தொகுதிகளிலும் மெகா வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்' என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு, போலிஸார் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை இலக்காக் கொண்டு மெகா இளைஞர்கள் மாநாட்டை நடத்தக் கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்த மாநாடு நவம்பர் 16 முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 9000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த மாநாட்டில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு குறித்து குறும்பட போட்டி நடைபெற உள்ளது. இதில் சிறந்த பத்து படங்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்படும். மேலும் இவற்றில் 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் இயக்குநர்களுக்குப் பிரபல இயக்குநர் லோகேஷ் கனராஜிடன் ஒரு சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த 5 பேரில் ஒருவருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!