Tamilnadu

தனியாரோடு போட்டி போடும் அரசு நிறுவனம்.. ஆவின் டிலைட் பால் 90 நாட்கள் கெடாமல் இருப்பது எப்படி?

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது குளிர்சாதன பெட்டிக்கு வெளியே வைத்திருந்தால் கூட 90 நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பாலை ஆவின் நிறுவனம் (ஆவின் டிலைட்) அறிமுகப்படுத்தியுள்ளது.

திமுக என்ன நல்லது செய்தாலும் விமர்சிக்கும் சிலர் இதனையும் விமர்சித்தனர். அதிலும் குறிப்பாக அதிமுகவினர் உண்மை என்ன, அதனால் மக்களுக்கு நன்மையா என்பது குறித்து ஏதும் தெரியாமல் திமுக அரசு ஏதும் திட்டத்தை கொண்டுவந்தாலே அதை எதிர்ப்போம் என்ற ரீதியில் விமர்சித்து வருகின்றனர்.

ஆவின் சமீபத்தில் UHT பாலை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், அது எப்படி பால் 3 மாதம் கெட்டுப்போகாமல் இருக்கும் , அதில் வேதிப்பொருள் கலந்திருக்கும் என்றெல்லாம் அரசியல் குறித்து ஏதும் தெரியாமல் பேசுவருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் மத்தியில் இது போன்ற கருத்து தொடர்ந்து பரபரப்பட்டு வந்தது.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் UHT ஆவின் பால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது 2019 இல் அதிமுக ஆட்சியில்தான். ஆனால் அப்போதே அது கைவிடப்பட்டது. உண்மையில் இப்போது ஆவின் செய்திருப்பது மறு அறிமுகம்தான். கர்நாடக - நந்தினி, குஜராத் - அமுல் , Britannia , Nestle னு இந்தியாவில் பல நிறுவனங்கள் UHT பாலை விற்பனை செய்துவரும் நிலையில், அதோடு போட்டிபோடும் வகையில் நமது ஆவின் நிறுவனமும் இந்த வகை பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

UHT (ultra heat treatment) முறையில் பால் அதி வெப்பநிலையில் சில வினாடிகள் கொதிக்க வைக்கப்பட்டு பாக்டீரியா அழிக்கப்பட்டு பேக் செய்யப்படும். இது போன்ற முறை பின்பற்றப்படுவதால் நீண்டநாள் கெடாமல் இருக்க எந்த வேதிப் பொருளும் அதில் சேர்க்கப்பட தேவையில்லாதது. அப்படி பேக் செய்யப்படும் பால் அதிகபட்சம் 6 மாதம் வரை பேக்கில் கெடாமல் இருக்கும்.பேக் ஓப்பன் செய்தால் மட்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 7 நாட்கள் பயன்படுத்தலாம். இந்த வகை பால் உடல்நலனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆளும் அரசு மீது ஆயிரம் விமர்சனங்கள் நமக்கு இருக்கலாம், கட்சியின் மீது நமக்கு ஒவ்வாமை இருக்கலாம்.ஆனால், அரசு நிறுவனம் ஒரு நல்ல முன்னெடுப்பை செய்யும்போது, நம் ஒவ்வாமையால் அரசு நிறுவனத்தின் நல்லதொரு நடவடிக்கையை கொச்சைப்படுத்துதல் அறம் அல்ல.

Also Read: பேசிக்கொண்டிருக்கும்போதே அரசு ஊழியரை கன்னத்தில் அடித்த பா.ஜ.க MP.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.. Viral Video !