Tamilnadu
பேச மறுத்ததால் ஆத்திரம்.. காதலி வீட்டு முன்பே காதலன் எடுத்த சோக முடிவு: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!
விருதுநகர் மாவட்டம் டி. காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் தேவகுமார். இவர் அதே பகுதியில் உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தேவகுமாருக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி வந்துள்ளனர். இது பற்றி அறிந்த அவர் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரைதான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து சொந்த ஊருக்கு தேவகுமார் வந்துள்ளார். அப்போது காதலியைச் சந்தித்து திருமணம் செய்து பேசியுள்ளார். இதற்கு அந்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்து பேசுவதை நிறுத்திக் கொள்ளும் படி கூறியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த தேவகுமார் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை காதலி வீட்டின் முன்பு சென்ற தேவகுமார் தான் எடுத்துவந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
பின்னர் அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!