Tamilnadu
“தண்ணீர் தொட்டிக்குள் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த குழந்தை” : போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மில் தொழிலாளியான இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் மூத்த மகனை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிடு, வேலைக்குச் சென்றுள்ளார்.
இதனிடையே இளைய மகன் தூங்கிக்கொண்டிருப்பதால், மாடியில் துணியை உலர்ந்த மனைவி மாரீஸ்வரி சென்றுள்ளார். அந்த சமயத்தில் விழுந்துக்கொண்ட இளைய குழந்தை அம்மாவை வீடு முழுவதும் தேடி அழுதுள்ளார்.
அப்போது வீட்டிற்கு பின்புற வெளியே இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் குழந்தை எதிர்பாராத விபதமாக விழுந்ததாக தெரிகிறது. இதனையடுத்து குழந்தையை காணவில்லை என மாரீஸ்வரி தேடிய போது, குழந்தை தண்ணீர் தொட்டியில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் பதறிபோய் குழந்தையை தூக்கியபோது மூர்ச்சையாகி அசைவின்றி கிடந்துள்ளார். குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை, முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் அறிந்துவந்த ராஜபாளையம் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!