Tamilnadu
மாணவிகள் முன்பு பந்தா காட்ட நினைத்து பஞ்சரான வாலிபர்.. அதே கல்லூரி வாசலில் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது. இக்கல்லூரி அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் மாணவிகள் முன் சீன்போட நினைத்த, வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி இந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவம் செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றுள்ளது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில, இருசக்கர வாகனம் ரயில்வே ஊழியர் கோபாலகிருஷ்ணன் என்பவரது என்றும் , சீன் போடநினைத்த வாலிபர் மகேஸ்வரன் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து போலிஸார் கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரன் மற்றும் வீடியோ எடுத்த 2 மாணவர்கள் என 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கோபாலகிருஷ்ணன், ஹரிஹரன், 17 வயது மாணவன் ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆனால் மகேஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை, ஒருவாரத்திற்குத் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அழகப்பா கல்லூரி முன்பே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து மகேஸ்வரன் அழகப்பா கல்லூரியில் 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலிஸார் முன்னிலையில் ஈடுபட்டு வருகிறார். இவர் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையிலும், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிய இளைஞருக்கு போக்குவரத்து சரி செய்ய, மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் வார்ட் பாயாகவும் பணியாற்ற அண்மையில் உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!