Tamilnadu
’ஏய் கம்முனு இருயா’.. செய்தியாளர்கள் முன் கத்திய எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவை நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மீண்டும் 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தில் அமைச்சர் துரைமுருகனைப் பேச முயன்றபோது, அ.தி.மு.கவினர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அவையை நடத்த விடாமல் தகராறு செய்தனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, 'கலங்கம் பண்ணும் நோக்கத்திலேயே இன்று நீங்கள் அவைக்கு வந்துள்ளீர்கள். இன்றைய அவையில் அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்துப் பேசினால் முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் அட்டூழியம் தெரிந்துவிடும் என்பதால் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள் என கூறி அ.தி.மு.க-வினரை வெளியேற்ற' உத்தரவிட்டார். மேலும் ஒருநாள் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் தடை விதித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்று சென்னை வள்ளூவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென 'ஏய் கம்முனு இருயா' என கையை நீட்டி பயங்கர ஆவேசமாக கத்தினார்.
எடப்பாடி பழனிசாமியின் திடீர் நடவடிக்கையைக் கண்டு செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அனுமதியின் போராட்டத்தில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினரை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !