Tamilnadu
ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் இந்த 10 புள்ளிகளை கவனித்தீர்களா? - ஆறுமுகசாமி ஆணையம் வைத்த ‘செக்’ !
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் முழு விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் முக்கிய புள்ளிகள் இதோ.,
>> 2016 செப்டம்பர் 22, அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
>> அன்று இரவு சுயநினைவற்ற நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலாவின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன
>> இதே நாள் காவிரி நதிநீர் கூட்டம் நடைபெற்றபோது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும், ராமலிங்கம் IAS அதனை தடுத்துள்ளார்; அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
>> ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஏன் ஆஞ்சியோ செய்யப்படவில்லை ?.. டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்ல தயார் என கூறியிருந்தும் அது ஏன் நடக்கவில்லை ?
>> சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரை
>> ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன.
>> 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்த நேரம் 4.12.2016 மதியம் 3.00 முதல் 3.50 மணிக்குள் ஆகும்
>> எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையிட மட்டுமே வந்தனர், மருந்து எதுவும் பரிந்துரைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்
>> சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த பிறகு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
>> மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா இட்லி, தயிர்சாதம், வெண்பொங்கல் ஓட்ஸ், தக்காளி சாதம், சீத்தாப்பழம் திராட்சை உள்ளிட்ட உணவுகளை உட்கொண்டதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்
>> ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனிலோ அல்லது அப்போலோ மருத்துவமனையிலோ மெல்லக் கொல்லும் விஷம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற மனோஜ் பாண்டியனின் தகவல் அனுமானம் மட்டுமே !
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!