Tamilnadu
2 வயது குழந்தையின் தலையில் விழுந்த TV.. தந்தை கண் எதிரே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கி கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சோக சம்பவத்தை அடுத்து திருவள்ளூரில் டி.வி விழுந்ததில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது 2 வயது மகன் சூபியன். சம்பவத்தன்று குடும்பத்தாருடன் சதாம் உசேன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த சூபியன், டிவி ஸ்டாண்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை மீது டிவி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது குழந்தையின் தலையில் டி வி விழுந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சூபியன் பரிதாபமான உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வயதுக் குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !