Tamilnadu
சொந்த ஊருக்குச் செல்லும்போது நடந்த துயரம்.. மாரடைப்பு ஏற்பட்டு பேருந்திலேயே உயிர்விட்ட பயணி!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்குச் செல்வதற்காகச் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சொகுசு பேருந்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரரும் இருந்துள்ளார்.
இதையடுத்து பேருந்து மேல்மருவத்தூர் அருகே சென்றபோது அவரது சகோதரர் செந்தில்குமாரை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் செந்தில் குமார் உடலைமீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்குச் செல்லும்போது பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டுப் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!