Tamilnadu
கர்ப்பமான கல்லூரி மாணவி போக்சோவில் அதிரடி கைது.. சேலத்தில் பரபரப்பு !நடந்தது என்ன ?
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வயது 17 வயதுடைய சிறுவன். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாமாண்டு பிடித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. எனவே அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் தங்கள் மகனை மீட்டு தரும்படி ஆட்கொணர்வு மனுவையும் பெற்றோர் தாக்கல் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் மாணவனை தீவிரமாக தேடி வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் மாணவன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் மாணவன் மற்றும் வாசுகி என்ற இளம்பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து வந்ததை அறிந்துகொண்டனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரித்ததில், இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தபோது காதலித்து வந்ததும், பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு தனியே வாழலாம் என்று முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
மேலும் அந்த மாணவனுக்கு 18 வயதாக இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் சிறுவனை திருமணம் செய்த குற்றத்திற்காக மாணவியை போக்ஸோ வழக்கில் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர். அதோடு வாசுகிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!