Tamilnadu
துணியைக் காயவைத்தபோது நடந்த துயரம். தந்தை - மகன் பரிதாப பலி: தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா. இந்த தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், பெரியம்மா வீட்டின் அருகே இருந்த தடுப்பு கம்பியில் கட்டப்பட்டிருந்த கொடியில் துவைத்த துணிகளைக் காயவைத்துள்ளார். அப்போது கொடியின் மீது மின்சார உயர் உரசி உள்ளது.
பின்னர் தாயின் சத்தம் கேட்டு வெளியே வந்த மகன் அவரை காப்பாற்ற முயன்றபோது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மகன் மற்றும் மனைவி மீது மின்சாரம் பாய்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் ராமர் இருவரையும் காப்பாற்ற நினைத்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையடுத்து மின்சாரம் தாக்கியதில் கணவர் ராமர், மகன் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி பெரியம்மா தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். துணி காயவைத்தபோது தந்தை மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!