Tamilnadu
அதிவேகமாக வந்த பைக்.. நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த துயரம்!
சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தனது 6 மாத குழந்தையுடன் , தங்களுக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடைக்குப் பூஜை போடுவதற்காகச் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதையடுத்து அவர் அண்ணா நினைவு வளையம் மேம்பாலம் அருகே இன்று அதிகாலை சாலை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தாய் மீது மோதியது.
இதில் தாய் மற்றும் 6 மாத குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரும், பெண்ணும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந் தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் போலிஸாரி முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் யார், அவருடன் வந்த பெண் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!