Tamilnadu
கோவில் குளத்தில் டிராக்டர் டிரைலர் திருட்டு.. வலைவீசி தேடிய போலிஸார்.. இறுதியில் சிக்கிய பாஜக தலைவர்!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது நகராட்சி சார்பில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இராஜபாளையத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்தக்காரர் இந்த பணியை செய்து வருகிறார். கட்டிட பணிகளுக்காக அவ்வப்போது அப்பகுதியில் கண்டெய்னர், டிராக்ட்டர், டிரைலர் மற்றும் கட்டுமான பொருட்கள் சேமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் ட்ரெய்லர் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக கட்டுமான ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது சகோதரர் கருப்பசாமி ஆகியோருக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து நகர காவல் நிலைய போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் கண்ணன் மற்றும் கருப்பசாமி இருவர் தான் ட்ரெய்லரை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த நகர காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பொதுப்பணியில் ஈடுபட்டிருந்த டிரைலரை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளருவர் திருடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!