Tamilnadu
பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்... AC கம்ப்ரசர் வெடித்ததில் ஏசி மெக்கானிக் 2 பேர் பரிதாப பலி!
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் AC பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிண்டி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனதில் பழுதடைந்த AC-யை பழுதுபார்ப்பதற்காக சின்னதுரை சென்றுள்ளார்.
மேலும் தன்னுடன் வேலை பார்க்கும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார்,கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் (41) ஆகிய இருவரையும் சின்னதுரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற மூன்று பேரும் 3வது மாடியிலிருந்த ஏசி அவுட்டோர் கம்ப்ரசரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காஸ் கசிந்து வெடித்தது. இந்த வெடிவிபத்தில் சின்னதுரை, இந்திரகுமார், சரவணன் ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை, இந்திரகுமார் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !