Tamilnadu
YouTube மூலம் வைரலான சிறுமி திடீர் மாயம்.. Instagram உதவியுடன் மீட்ட போலிஸ்: நடந்தது என்ன?
சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்து வரும் 17 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பக நிர்வாகம் சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து சிறுமி திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல் போனதைக் கண்டு காப்பக நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறுமியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ போடுவதில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது பக்கத்தை ஆய்வு செய்தபோது சிறுமி எண்ணூரில் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அங்கு சென்ற போலிஸார் சிறுமியை மீட்டனர். மேலும் காப்பகத்தில் இருக்க சிறுமி விரும்பாததால் அவரை அவரது தந்தையிடமே போலிஸார் ஒப்படைத்தனர்.
மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்களைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ செய்வதற்காகச் சிறுமி மருத்துவமனையிலிருந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சிறுமிதான் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து வைரலானார். இவரது தந்தை துரைராஜ் மனைவி இறந்ததால் மகனை கவனிக்க முடியாமல் காப்பகத்தில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!