Tamilnadu
“அரசு பள்ளியில் இருந்து மின்சாரத்தை திருடிய பாஜகவினர்” : அண்ணாமலை கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் அராஜகம்!
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்ட நிகழ்ச்சியிலேயே அரசு பள்ளியில் இருந்து மின்சாரத்தை திருடி, பா.ஜ.க நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுவதாகக் கூறி, இத்தகைய திருட்டு சம்பவத்தை பா.ஜ.கவினர் அரங்கேற்றியுள்ளனர். விருதாச்சலம் அருகே அலிச்சகுடி கிராமத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் போது பா.ஜ.க சார்பில் ஒலி, ஒளி நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருந்த அரசு பள்ளியின் கட்டிடத்தின் மின் மீட்டரில் இருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு எடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.கவினரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!