Tamilnadu
கணவன் அடித்ததால் விபரீத முடிவெடுத்த காதல் மனைவி.. உறவினர்கள் அதிர்ச்சி!
திருவள்ளூர் மாவட்டம் , பூந்தமல்லியை அடுத்த எம்.வி.எம் நகரைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி சத்யா. இந்த தம்பதிகள் 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்றும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மனைவி சத்யா தனது அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டுள்ளார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் கணவன் ஜன்னல் வழியாகப் பார்த்த போது மனைவி தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் சத்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சத்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த வழக்கு ஆர்.டி. ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளடுள்ளது. கணவன் அடித்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?