Tamilnadu
தர்மபுரி: இரும்பு பீரோவால் வந்த வினை.. மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.. வீடுகாலி செய்யும்போது நேர்ந்த சோகம்!
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வேல்பால் டிப்போ அருகே உள்ள சந்தைப்பேட்டை என்ற பகுதியில் வசிப்பவர் பச்சையப்பன். இவர் தனது முதல் மாடி வீட்டை இலியாஸ் என்ற நபருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில், இலியாஸ் தனது வாடகை வீட்டை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர நினைத்துள்ளார்.
அதற்காக நேற்று அவரது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல வேன் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் பொருட்களை ஏற்றும்போது அவர் வீட்டில் இருந்த இரும்பு பீரோவை கயிறு கட்டி கீழே இறக்கியுள்ளனர். இதற்கு வேன் ஒட்டுநர் கோபி, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், குமார் என்ற நபர் என 3 பேர் இலியஸுக்கு உதவி புரிந்துள்ளனர். அதன்படி 4 பேரும் சேர்ந்து பீரோவை கீழே இறக்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராவிதமாக வீட்டை ஒட்டியபடி செல்லும் மின்சார கம்பியில் இரும்பு பீரோ உரசியது. இதில் மின்சாரம் அவர்கள் 4 பேர் மீதும் தாக்கியுள்ளது. இந்த மின் தாக்குதலில் இலியாஸ், பச்சையப்பன், வேன் ஓட்டுநர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை கண்டதும் பதறி போன அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த மூன்று பேர் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடை காலி செய்வதற்காக பீரோவை கீழே இறக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!