Tamilnadu
மதுரை:வீட்டிலிருந்த 60 பவுன் நகைகளை திருடி INSTA ஆண் நண்பருக்கு கொடுத்த 16வயது சிறுமி.. சிக்கியது எப்படி?
தற்போதுள்ள இணைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மொபைல் போன்கள் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் சமூக வலைதளங்களான முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இதில் இன்ஸ்டாகிராம் மூலம் தெரியாத நண்பர்களுடன் நட்புறவு கொண்டு அவர்கள் வலையில் சிக்கிய பெண் சிறுவர்கள் ஏராளம்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 22 வயதுடைய இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரோ சிறுமியை தவறாக பயன்படுத்த எண்ணியுள்ளார். அதன்படி சிறுமியிடம் ஒருமுறை அவசரத்தேவை என்று கூறி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் பணம் இல்லை என்று கூறியதால் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொடுக்கும்படி கூறியுள்ளார்.
சிறுமியோ தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளில் கொஞ்சத்தை எடுத்து கொடுத்துள்ளார். இப்படியே சில முறை தொடர்ந்து கேட்டதால் சிறுமியும் மறுப்பு தெரிவிக்காமல் எடுத்துக்கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது பீரோவில் உள்ள நகை காணாமல் போவதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு எய்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிதான் தனது இன்ஸ்டா நண்பருக்கு நகைக்களை கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!