Tamilnadu

”கீர்த்தி அல்ல மூர்த்திதான் பெரிது”.. அமைச்சர் மூர்த்தியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தியானேஷ் - ஸ்மிர்தவர்ஷினி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திருமண விழாவாக விளம்பரபடுத்தாமல், மண்டல மாநாடு அல்லது மாநாடு என்று விளம்பரம் செய்து இருந்தால் பொருத்தமாக இருக்கும். அமைச்சர் மூர்த்தி எந்த நிகழ்ச்சியையும் சிறிய அளவில் நடத்த மாட்டார்.

இந்த திருமண நிகழ்ச்சியை தி.மு.க அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையிலும் ஏற்படுத்தி உள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுவார்களே அது போல.

யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதது குறித்து நடத்திய ஆலோசனையில், மூர்த்திக்கு வணிகவரி துறை வழங்கலாம் என்று முடிவு செய்தோம். எனக்கு சிறிது தயக்கம் இருந்து. அவர் கோபக்காரர் என்று . ஆனால் தற்போது பொறுமையின் சிகரமாகவே மாறி விட்டார்.

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உரை குறித்து குறிப்பு எடுப்பது உண்டு. திருமண நிகழ்ச்சியில் குறிப்பு எடுப்பது இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்கு குறிப்பு எடுத்தேன். அந்த அளவிற்கு அமைச்சர் மூர்த்தியின் சாதனை அதிகம்.

பொது சொல்வது உண்டு மூர்த்தி பெரிதா?, கீர்த்தி பெரிதா? என்று. ஆனால் என்னை பொறுத்தவரை மூர்த்தி தான் பெரிது. பதிவு அலுவலகங்களில் 70 வயது மேற்பட்டோர் முன்னுரிமை, மாற்று திறனாளிகளுக்கு சாய்தளம், பதிவாளர் மேடை அகற்றம் இப்படி சொல்லி கொண்டு போலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டில் பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!