Tamilnadu
வளர்ப்பு நாயோடு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.. விசாரணையில் போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது வீட்டின் முதல் மாடியில் ராஜ் என்பவர் இரண்டு வருடங்களாக வாடகைக்குக் குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாஸ்கர் வீட்டு வாடகை வாங்குதற்காக வந்துள்ளார். அப்போது ராஜ் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பாஸ்கர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் போலிஸார் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தான் வளர்த்துவந்த நாயோடு சேர்த்து ராஜ் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலிஸார் நாய் மற்றும் ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீட்டின் சுவரில் சென்னையில் உள்ள தன்னுடைய மனைவி இறந்து விட்டதால் இனி நான் வாழ விரும்ப வில்லை என எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவன் வளர்ப்பு நாயோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!