Tamilnadu
‘பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர்.
அந்த வகையில் பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு அவர் பேசும்போது, "கடந்த 1999 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் மாவட்ட அணியின் பொதுச்செயலாளராக இருந்தேன். இப்படி படிப்படியாக பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக பணிபுரிந்து வந்தேன். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜகவில் பணபடைத்தவர்களுக்கே பதவி என்று மாறியது.
அதனால் நான் அந்த கட்சியில் இருந்து வெளியேறினேன். முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு, மகளிர் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். தற்போது திமுகவின் இணைந்திருக்கும் நான், மகளிர் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன்" என்றார்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!