Tamilnadu

ஆரணி அருகே கரணம் அடித்த கபடி வீரர் உயிரிழப்பு.. கோவில் திருவிழாவில் நடந்த சோகம் !

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் என்பவர் மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாடிகொண்டிருந்தபோது காயமடைந்து கபடி களத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மற்றொரு கபடி வீரர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோவில் திருவிழாவில் கபடி வீரர் வினோத்குமார் என்பவர் கரணம் அடிக்கும் போது அவரின் தலை தரையில் மோதியதில் அங்கேயே மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

தொடர்ந்து அவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் மரணம் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழ்ந்த வினோத்துக்கு சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் என்ற மகன்களும் உள்ளனர்.

Also Read: பிரபல VJ கௌஷிக் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் இரங்கல் !