Tamilnadu
இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி: சிக்கியது எப்படி?
திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த இளைஞர் மீது கண்காணிப்பாளர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் என்பவருக்குப் பதிலாகத் தேர்வை எழுதுவதற்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!
-
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
-
“தமிழ்நாடு அங்கன்வாடி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்!” : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
-
ரூ.36.62 கோடி செலவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கலைஞர் இன்று இல்லை.. ஆனால் அவர் பேசப்படுகிறார் ”: எழுத்தாளர் இமையம்!