Tamilnadu
"முழு நேர அரசியல்வாதியாகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி": தொல். திருமாவளவன் விமர்சனம்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகத்தை நெறிக்கக் கூடிய கூட்டத் தொடராக நடந்து முடித்துள்ளது என வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன்," நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளைய நசுக்கக் கூடியதாக இருந்தது. 4 நாட்களுக்கு முன்கூட்டியே கூட்டத்தொடரை நிறைவு செய்துள்ளனர்.
இதுவரை இல்லாத வகையில் 18 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைப்பார்த்தாலே தெரிகிறது எந்த அளவிற்கு ஜனநாயகம் நெறிக்கப்பட்டிருக்கிறது என்று.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு ஒரு வரலாற்றுச் சிறப்பாக அமைந்துள்ளது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். இந்தியா முழுவதும் இதுபோன்று ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால் ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆளுநர் முழு நேர அரசியல்வாதியாகவே செயல்படுகிறார். இந்த போக்கு மாநில அரசுக்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!
-
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
-
என் மானத்தை வாங்காதீங்க: வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ்: Entertainment-காக மூன்று அணிகளாக பிரிந்த BB வீடு!