Tamilnadu

துணி மூட்டைகளுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்.. மனைவி காணாமல் போனதாக நாடகமாடியது கணவன் - பகீர் தகவல்!

சென்னை திருவொற்றியூர் பூங்காவனம் நகர் பகுதியைச் சார்ந்தவர் மைதிலி (37). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மணிமாறன் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மைதிலி கடந்த புதன்கிழமை அன்று இரவு முதல் காணவில்லை என்றும் வெள்ளிக்கிழமையன்று திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கணவன் மணிமாறன் புகார் அளித்திருந்தார். மைதிலியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரும் மைதிலியை அனைத்து பகுதிகளிலும் தேடி வந்தனர்.

திருவொற்றியூர் காவல் துறையினர் மைதிலி கடைசியாக மணலியில் உறவினர் இறப்பு சம்பவம் ஒன்றிக்கு சென்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அங்கு உள்ள உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மணலி மேம்பாலத்தின் அடியில் இறந்து அழுகிய நிலையில் பெண் ஒருவர் உடல் கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், மணலி காவல்துறையினர் மற்றும் மைதிலியின் தாய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தனர். அப்பொழுது மைதிலியின் உடல் மீது பழைய துணி மூட்டைகளை அடுக்கி மறைத்து வைத்திருந்தததும், மைதிலி இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் மணலி காவல்துறையினர் கணவன் மணிமாறனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

மணிமாறன் தன் மனைவி மைதிலி மீது சந்தேகப்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று இரவு மைதிலி இறப்பு காரியத்திற்கு சென்று வீடு திரும்பும் பொழுது அங்கு பழகிய நபர் ஒருவரோடு இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், அப்பொழுது எதிரில் வந்த கணவன் மணிமாறன் இருவரையும் பார்த்து சந்தேகம் அடைந்து, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மைதிலியை தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு மனலி மேம்பாலத்திற்கு அழைத்துச் சென்று அங்கே மைதியிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் மைதிலியின் சேலையை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து என்ன செய்வது என்று தெறியாமல் பாலத்தின் அடியில் மைதிலியின் உடலை போட்டு விட்டு அருகில் இருந்த பழைய துணி மூட்டைகளையும் உடலின் மீது மறைத்து வைத்துள்ளார்.

ஆனால், இதை எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்து தானும் ஒப்பனைக்காக தேடி வந்துள்ளார். இரண்டு நாட்களாக காவல்துறைக்கு நான் கொலை செய்யவில்லை என்று கூறியவர் ஒரு கட்டத்தில் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டத்தில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மணிமாறனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Also Read: கிரிக்கெட் மட்டையால் கணவர் கொலை.. மகனை மாட்டி விட்ட கொடூர தாய்.. வெளியான அதிர்ச்சி காரணம் !