Tamilnadu
தோழியுடன் மகிழ்ச்சியாக விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. தாய் கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கண்மணி. இந்த தம்பதிக்கு தனன்யா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தனன்யாவின் பள்ளித் தோழியான கனுஷ்யாவின் வீட்டிற்கு மகளை கண்மணி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தோழிகள் இருவரும் அங்கிருந்த நீச்சல் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தனன்யா நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார். இதைப்பார்த்த அவரது தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் நீச்சல் குளத்தில் குதித்து சிறுமியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு தாய் கதறி அழுதது மருத்துவமனையில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். தாய் கண்முன்னே நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!