Tamilnadu
கேமராவுக்கு போஸ் கொடுத்தபோது அருவியில் விழுந்த இளைஞர்.. நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்!
தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற இளைஞர் கீழ்மலை கிராமத்தில் உள்ள பெரும்பறை அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்ப்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இளைஞர் அஜய் பாண்டியன் அருவியில் தவறி விழும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!