Tamilnadu
பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து.. பிரபல ஸ்ட்ண்ட் மாஸ்டர் மீது வழக்குப் பதிவு!
சினிமாவில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் கனல் கண்ணன் பா.ஜ.கவில் இணைந்தார். இதையடுத்து இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சையான கருத்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து கனல் கண்ணன் சர்ச்சையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ட்ண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!