Tamilnadu
யாருக்காக ஏலத் தொகை குறைந்தது?.. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பெரும் முறைகேடு: திமுக MP ஆ.ராசா குற்றச்சாட்டு!
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றன. இதில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போயுள்ளது. சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தி.மு.க எம்.பி ஆ.ராசா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, "5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது.
2ஜி, 3ஜி, 4ஜி ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை ரூ. 5 முதல் 6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என ஒன்றிய அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே விரிவான விசாரணை வேண்டும்.
இது யாருக்காகச் செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!