தமிழ்நாடு

’முதலைக்கண்ணீர்’ வார்த்தையை பயன்படுத்திய நிர்மலா சீதாராமன்.. சபாநாயகருக்கு கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன்!

நாடாளுமன்றத்தில் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்திய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

’முதலைக்கண்ணீர்’ வார்த்தையை பயன்படுத்திய நிர்மலா சீதாராமன்.. சபாநாயகருக்கு கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு எம்.பி.க்கள் அவையில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது என்ற வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது.

அதில் ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, முதலைக்கண்ணீர் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் இந்த நாடாளுமன்ற அவை நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்தன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை’ என பேசியுள்ளார்.

இதையடுத்து அவையில் தடை செய்யப்பட்ட வார்த்தையை ஒன்றிய அமைச்சர் மட்டும் எப்படிப் பேசலாம். அவர் மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’முதலைக்கண்ணீர்’ வார்த்தையை பயன்படுத்திய நிர்மலா சீதாராமன்.. சபாநாயகருக்கு கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன்!

இந்நிலையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில், “முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள் சபாநாயகர் ஓம் பிர்லா" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories