Tamilnadu
பழைய ரூ.20 நோட்டுடன் கடை கடையாய் திரிந்த மூதாட்டி.. பேத்திக்கு இனிப்பு வாங்க சென்றவருக்கு பரிதாப நிலை !
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த வாரச்சந்தையில் அந்த பகுதி மக்கள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை எளிய முறையில் வாங்கலாம்.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வாரச்சந்தையில் வழக்கம்போல் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வந்திருந்தனர். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும் அந்த வாரச்சந்தைக்கு வந்திருந்தார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த பொருட்களில் தேவையானவற்றை வாங்கிய மூதாட்டி, ஒரு இனிப்பு கடைக்கு சென்றிருந்தார். தனது பேத்திக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால் அங்கிருந்த இனிப்புகளை வாங்கியுள்ளார். வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பணத்தை கொடுக்கும்போது தன்னிடம் இருந்த பழைய இரண்டு 20 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய கடைக்காரர் இது பழைய நோட்டு, செல்லாது என்று திருப்பி கொடுத்துள்ளார். இதை கேட்டு அதிர்ந்த மூதாட்டி அந்த 20 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு அழைந்து திரிந்து அந்த ரூபாய் நோட்டை கொடுத்தாலும், யாரும் அதனை வாங்க முன்வரவில்லை. மூதாட்டியின் இந்த நிலையை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பரிதாபமாக பார்த்தனர்.
மூதாட்டி கொடுத்த 20 ரூபாய் நோட்டானது இந்தியாவில் முதலில் அச்சடிக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டாகும். தற்போது இதன் மதிப்பு நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்தாலும், இனி வரும் காலங்களில் இது போன்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் லட்சக்கணக்கில் மதிப்பு பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!