இந்தியா

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தம்பி.. சுதாரித்து கப்பென்று catch பண்ண அண்ணன் : Viral Video

மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த தம்பியை லாவகமாக சுதாரித்து கப்பென்று பிடித்து அண்ணன் காப்பற்றியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தம்பி.. சுதாரித்து கப்பென்று catch பண்ண அண்ணன் : Viral Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் 2 சகோதரர்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த சகோதரர்களில் ஒருவர் மேலேயும், மற்றொருவர் கீழேயும் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தம்பி.. சுதாரித்து கப்பென்று catch பண்ண அண்ணன் : Viral Video

அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக மேலே நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தவர், கால் இடறி கீழே விழுந்தார். விழுந்த அவரை கீழே நின்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த மற்றொரு சகோதரன் சுதாரித்து பிடித்துள்ளார்.

பின்னர் எடை தாங்காமல் பிடித்த சகோதரனும் கீழே விழுந்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. கீழே விழுந்ததில் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லை.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், ஒரு சகோதரன் மேலே இருந்து எதிர்பாராதவிதமாக விழுந்த நேரத்திலும் கூட, மற்றொரு சகோதரன் லாவகமாக அவரை பிடித்துள்ளார். தற்போது இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories