Tamilnadu

"அறிய வாய்ப்பை வழங்கிய அரசுக்கு நன்றி.." - செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்த்த அரசு பள்ளி மாணவர்கள் !

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், ஜூலை 28 தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.

இதில் போட்டியின் முதல் நாளிலே முதல் சுற்றிலே இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் வென்று அசத்தினார். மேலும் இந்த போட்டியில் பல்வேறு ஸ்வாரசிய நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் 100 பேர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் சென்று பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி நடத்தப்பட்டது.

சுமார் 8000 மாணவர்கள் பங்கேற்றதில், தற்போது மாவட்ட அளவில் 100 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு சார்பில் இலவசமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும் அரங்கத்திற்குள் போட்டி எவ்வாறு நடக்கிறது என்பதை கண்டு ரசித்தனர். அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், போட்டியை நேரில் பார்த்தது, தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இது போன்ற அரிய வாய்ப்பு தங்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக தோன்றும் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Also Read: "இவருக்கு இது தேவையில்லாத வேலை, இப்படியா செய்வது?" -டிராவிட்டை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!