Tamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் ! சந்திப்பின் காரணம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதில் இந்த ஆண்டு ‘மார்க்ஸ் மாமணி’ என்ற விருதும் வழங்ப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சுடர் -மாண்புமிகு கர்நாடக மேனாள் முதல்வர் திரு.சித்தராமையா,
பெரியார் ஒளி-எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராஜதுரை,
காமராசர் கதிர் -விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.வி.ஜி.சந்தோசம்,
அயோத்திதாசர் ஆதவன்-மேனாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி திரு.செல்லப்பன்,
காயிதேமில்லத் பிறை-எஸ்.டி.பி.ஐ தலைவர் திரு.தெகலான் பாகவி,
செம்மொழி ஞாயிறு -தொல்லியல் அறிஞர் திரு.பேரா.கா.ராசன்,
மார்க்ஸ் மாமணி -மறைந்த எழுத்தாளர் திரு.ஜவஹர், ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று சென்னை வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் வந்த சித்தராமையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என கூறப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை குறித்தும் சித்தராமையா கேட்டறிந்தார்.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!