Tamilnadu
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூலி தொழிலாளி: ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று அசத்திய தூத்துக்குடி இளைஞர்!
மாலத்தீவில் ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை 54வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் உள்ள 24 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற 79 வீரர்களில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த தொடரில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் 75 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 70 கிலோ பிரிவில் ஹரிபாபு, 90 கிலோ பிரிவில் சரவணன்,100 கிலோ பிரிவில் கார்த்தீஸ்வர் ஆகிய மூன்று பேரும் தங்கம் வென்றுள்ளனர்.
அதேபோல், மாஸ்டர் பிரிவில் ரத்தினம் வெள்ளிப் பதக்கமும், புருஷோத்தமன், விக்னேஷ், ராஜ்குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
கூலித் தொழிலாளியான மாற்றுத்திறனாளி சுரேஷ் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற உதவிய AdityaRam குழும நிறுவனர் ஆதித்யா ராமுக்கு சுரேஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!