Tamilnadu
செஸ் ஒலிம்பியாட்டில் பல்வேறு மாநில பாரம்பரியத்தை கெளரவித்த தமிழ்நாடு அரசு !
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எண்ணிய நிலையில், அவர் வர தாமதமானதால் தற்போது விழா களைகட்டி வருகிறது.
இன்று தொடங்கி (ஜூலை 28) வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த விழாவில், போட்டியில் பங்கு பெரும் அனைத்து நாட்டினரும், தங்கள் கோடியை மற்றும் நாட்டின் பெயர் பொருந்திய பதாகைகளை ஏந்தி அணிவகுத்தனர்.
இதையடுத்து இந்த விழாவிற்கு வந்தவர்களை சிறப்பிக்கும் வகையில், இந்தியா பன்முகத்தன்மை கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடனக்கலைஞர்கள் பாரம்பரிய நடனத்தை நடமாடி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
அதில் உத்தர பிரதேச மாநிலத்தின் 'கதக்', மணிப்பூர் மாநிலத்தின் 'மணிப்புரி', அசாம் மாநிலத்தின் 'சத்ரியா', ஒடிசா மாநிலத்தின் 'ஒடிசி', ஆந்திர மாநிலத்தின் 'குச்சிப்பிடி', கேரளா மாநிலத்தின் 'மோகினியாட்டம் & கதகளி', தமிழ்நாட்டின் 'பரதநாட்டியம்' உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றிருந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!