Tamilnadu
முந்திச் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்த பைக் : டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி !
சென்னை கொருக்குப்பேட்டை தமிழர் நகரை சேர்ந்தவர் லோகநாதன் வயது (40). ஆட்டோ டிரைவர் இவர் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ECI பள்ளி அருகே சென்று கொண்டு இருந்த டேங்கர் லாரியை முந்தும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த லோகநாதன் மீது, பின்னால் வந்த டேங்கர் லாரியின் சக்கரம் இடது கால் தொடையில் ஏறி இறங்கியது.
அலறல் சத்தம் கேட்டு லாரியை நிறுத்தி ஒட்டுனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, லோகநாதன் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்கு பதிவு செய்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கிஷோர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!