Tamilnadu
கள்ளக்குறிச்சி விவகாரம் : கலவரத்திற்கு காரணமானவர்களை பிடிக்க கூடுதலாக 56 போலிஸ் நியமனம் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் கலவரமாக மாறியதில், அந்த பள்ளியிலுள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடபட்டது.
இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். பின்னர் இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி தெரிவித்திருந்தார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் காவல்துறை கைது செய்வதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்தில் போலியான தகவல்களை பரப்புவதாக சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த கலவரம் தொடர்பாக டி.ஜி.பி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக எஸ்.ஐ.க்கள் உட்பட 56 காவல் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதில் சேலம் டி.ஐ.ஜி பிரவீன் குமார், ஆவடி கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி சிங்க்ஸ்லின், விழுப்புரம் கூடுதல் எஸ்.பி திருமால், திருப்பத்தூர் கூடுதல் எஸ்.பி முத்துமாணிக்கம், நாமக்கல் கூடுதல் எஸ்.பி சந்திரமேளலி ஆகியோர் இடபெற்றுள்ளனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!